#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தவானுக்கு பதிலாக இறங்கப்போவது யார்? யாருக்கு அந்த அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 15 போட்டிகள் இதுவரை முடிந்துள்ள நிலையில் மூன்று போட்டிகளில் வெற்றிபெற்று நியூசிலாந்து அணி முதல் இடத்திலும், ஆத்ரேலியா அணி இரண்டாவது இடத்திலும், இந்தியா ஆடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளது.
கடந்த போட்டியில் ஆத்ரேலியா அணியை இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிபெற்றது. அந்த ஆட்டத்தில் மிக சிறப்பாக விளையாடிய இந்திய அணி வீரர் ஷிகர் தவான் அதிகபட்சமாக 117 ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இந்த நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் தவான் காயம் காரணமாக மூன்று வாரங்களுக்கு நீக்கப்பட்டு இருக்கிறார். தவான் இல்லாததால் இந்திய அணிக்கு இந்திய அணிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் தவானுக்கு பதிலாக யார் இறங்கப்போவது என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது இந்திய அணியின் பிரிதிவி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், அம்பத்தி ராயுடு ஆகிய நான்கு பேரில் யாராவது ஒருவர் களமிறங்க வாய்ப்புள்ளது.
ரிஷப் பந்த் களமிறங்கினால், தற்போது அணியில் உள்ள ராகுல் துவக்க வீரராக களமிறங்க வாய்ப்பு உள்ளது. ஒருவேளை துவக்க வீரருக்காக வீரரை தேர்ந்தெடுத்தால் பிரிதிவி ஷாவிற்கு வாய்ப்பு கிடைக்கும் எனவும் எதிர்பார்க்க படுகிறது.