#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்ளுமா! - ஐசிசி தலைவர் விளக்கம்
புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்த சூழலில் வரும் மே மாதம் துவங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுடனும் விளையாடக் கூடாது என இந்திய ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் சார்பாக பல்வேறு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
வரும் மே மாதம் இறுதியில் இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்க இருக்கிறது. இந்த தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் ஜூன் 16ஆம் தேதி இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் புல்வாமா நகரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட கூடாது என எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் இதுபற்றி கூறிய பொழுது, "நாடு தான் முதலில் முக்கியம்; எனவே இந்திய அணி உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது" என கருத்து தெரிவித்திருந்தார். அவருக்கு ஆதரவாக பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் டேவ் ரிச்சர்ட்சன், "இதுவரை உலக கோப்பை தொடருக்கான அட்டவணையில் எந்தவித மாற்றங்களும் செய்யவில்லை; அதைப்பற்றி எந்தவித ஆலோசனையும் நடைபெறவில்லை. உலககோப்பை போட்டி அட்டவணையில் அறிவிக்கப்பட்ட போட்டிகளில் எந்த போட்டியையும் ரத்து செய்யும் எண்ணம் இல்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல் போட்டிகள் நடைபெறும்" என தெரிவித்துள்ளார்.