பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
மழை பெய்ய வாய்ப்பு உள்ளதா! போட்டி நடைபெறும் மான்செஸ்டரில் இன்றைய வானிலை எப்படி உள்ளது?
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற உள்ளது. மழையால் ஆட்டம் பாதிக்கப்படும் என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
எல்லா அணிகளும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது எதார்த்தம்தான். ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் எதிர்கொள்கின்றன என்றால் அதனை ஒரு வரலாறாகவே பார்க்க பழகிவிட்டனர் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்களைத் தவிர உலகத்தில் உள்ள அத்தனை ரசிகர்களும் விரும்பி பார்க்கக் கூடிய ஒரு போட்டியாக இந்தியா-பாகிஸ்தான் போட்டி அமைந்துவிடுகிறது.
ஒன்பது மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட போட்டி அட்டவணையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் இந்த ஜூன் 16ம் தேதியை அனைவருமே தனது காலண்டரில் குறித்து வைத்துவிட்டனர். அதுவும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கோடிக்கணக்கான ரசிகர்கள் இந்த போட்டியை காண்பர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் டிக்கெட் விற்பனை செய்யத் துவங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த அளவிற்கு ஆர்வமாக உள்ளனர் கிரிக்கெட் ரசிகர்கள்.
இந்த அளவிற்கு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்ட ரசிகர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவே முடியாது. இந்த உலக கோப்பை தொடரில் ஏற்கனவே 4 போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று வரை இன்றைய போட்டி நடைபெறும் மான்செஸ்டர் பகுதியில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவித்தன.
Okay last update for 30 minutes cos I have to get ready and leave...
— Chetan Narula (@chetannarula) June 16, 2019
Cloudy but sun is also out. English weather, right?! No rain at the moment. #WeatherManForADay #IndvPak #IndvsPak #IndiaVsPakistan #CWC19 pic.twitter.com/Gj4llUTksX
தற்போது இந்திய நேரப்படி மதியம் 12.30 மணியளவில் கிடைத்துள்ள தகவலின்படி ஆட்டம் நடைபெறும் பகுதியில் மேகங்கள் விலகி இருப்பதும் சூரியன் வெளியே தெரிவதும் என விளையாடுவதற்கு ஏதுவான வானிலை இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த போட்டி மழையால் பாதிக்கப்படாமல் முழு போட்டியையும் ரசிகர்கள் கண்டு களிக்கலாம் என்பதுதான் தற்போது கிடைத்துள்ள உற்சாகமான தகவல்.
Cloudy as am on way to stadium. Let’s hope that’s the worst and nothing more. #WeatherManForADay #IndvPak #IndvsPak #IndiaVsPakistan #CWC19 pic.twitter.com/d9RnBmfnWL
— Chetan Narula (@chetannarula) June 16, 2019