இன்று நடக்கும் வாழ்வா- சாவா ஆட்டம்.! இறுதிப்போட்டிக்கு கெத்தாக முன்னேறுமா தீப்தி ஷர்மா அணி.?



womens chalenge T20

 

பெண்களுக்கான சேலஞ்ச் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி புனேயில் நடந்து வருகிறது. இதில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 3-வது மற்றும் கடைசி லீக்கில் தீப்தி ஷர்மா தலைமையிலான வெலோசிட்டி அணி, ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான டிரையல்பிளாசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இன்று நாடாகும் ஆட்டத்தில் வெலோசிட்டி அணி வெற்றி பெற்றால் எளிதாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். ஒருவேளை வெலோசிட்டி அணி தோல்வியடைந்தால் வெலோசிட்டி, டிரையல்பிளாசர்ஸ், சூப்பர் நோவாஸ் அணிகள் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் சமநிலையில் இருக்கும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் இரு அணிகள் இறுதிசுற்றுக்கு தேர்வாகும்.

இந்தநிலையில், இன்று நடக்கும் போட்டி வெலோசிட்டி அணிக்கு பெரும் சவாலாக இருக்கும்.

வெலோசிட்டி அணி வீராங்கனைகள்:
ஷாபாலி வர்மா, நட்தக்கன் சாந்தம், யஸ்டிக்கா பாட்டியா(w), லாரா வோல்வார்டட், தீப்தி ஷர்மா(c), கிரண் நவகிரி, ஸ்நேஹ ராணா, ராதா யாதவ், காடே கிராஸ், அயபோங்க காக்க, மாயா சோனாவானே, கீர்த்தி ஜேம்ஸ், ஷிவாலி ஷிண்டே, சிம்ரன் பகதூர், ஆர்த்தி கேதார், பிரணவி சந்திரா.

டிரையல்பிளாசர்ஸ் அணி வீராங்கனைகள்:
ஸ்மிர்தி மந்தனா(c), ஹயலே மத்தியூஸ், ஜெமிமாஹ் ரொட்ரிக்கஸ், சோபியா டுங்களே, ஷர்மின் அக்தர், ரிச்சா கோஸ்(w), அருந்ததி ரெட்டி, சல்மா காட்டுன், பூணம் யாதவ், ரேணுகா சிங்க், ராஜேஸ்வரி கெய்க்வாட், சாபபினெனி மோகன, பிரியங்கா பிரியதர்ஷினி, சாய்க்க இஷாக்யூ, சாரதா பாவ் போகார்கர், சுஜாதா மாலிக்.