உலக கோப்பையில் பும்ரா தான் டாப்! எதிரணிகளை அச்சுறுத்தும் சச்சின்.!



world-cup---sachin-tendulker--pumra

இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடியது. இந்நிலையில் டி20 போட்டிகள் சமநிலையில் முடிந்த நிலையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடரை என்று வென்று அசத்தியது.

வெளிநாட்டு மைதானங்களில் இந்திய அணியின் சிறப்பான செயல்பாடுகளுள் ஒன்றாகவும் இது பார்க்கப்பட்டது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் பெரும் பங்கு வகித்துள்ளனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இத்தொடரில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா சிறப்பாக செயல்பட்டு 4 டெஸ்ட் போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

World cup 2019

இந்நிலையில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் பும்ரா குறித்து பேசும்போது: பும்ராவின் வெற்றி எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. முன்பே தெரிந்ததுதான் ஏனெனில், 2015 ஆம் ஆண்டிலிருந்து அவரது திறமையையும் போராட்ட குணத்தையும் பார்த்துள்ளேன். மிகக் கடுமையான பயிற்சிக்கு இடையே தன்னை தயார் செய்து கொண்டுள்ளார்.

அவரது வித்தியாசமான மற்றும் பேட்ஸ்மேன்களால் எளிதில் கணிக்க முடியாத பந்துவீச்சு முறையும் மேலும் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தும் யுக்தியையும் நன்றாக தெரிந்து வைத்துள்ளார். உலக கோப்பை தொடரில் எதிரணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியாவின் சொத்து அவர் என்று தெரிவித்துள்ளார்.