சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
இங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா?
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது வரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
இங்கிலாந்து மான்செஸ்டர் மைதானத்தில் நாளை கிரிக்கெட்டில் பரம எதிரியான பாகிஸ்தானை இந்திய அணி எதிர்கொள்கிறது. இப்போட்டியை காண இந்தியா, பாகிஸ்தான் மட்டுமல்லாமல் உலக அளவில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்போட்டியை நேரடியாக மைதானம் சென்று காண வெளிநாட்டு ரசிகர்கள் குவிந்துள்ளனர்.
ஆத்ரேலியாவுடனான போட்டியில் தவானுக்கு கட்டை விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அடுத்த மூன்று வாரத்திற்கு ஆருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் ஏற்கனவே ‘பேக் அப்’ வீரர்களாக ரிஷப் பண்ட், அம்பதி ராயுடு ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர். தவானுக்கு பதில் மாற்று வீரராக ரிஷப் பண்ட் இங்கிலாந்து கிளம்பி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.
இந்நிலையில் காயத்தின் காரணமாக ஓய்வில் இருந்து வரும் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுக்கு பதிலாக ரிஷப் பந்த் இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. ஆனால் உலகக்கோப்பை அணியில் தான் தேர்வு செய்யப்படாததை குத்திக்காட்டும் விதமாக அணித்தேர்வுக்கு பின் ராயுடு வெளியிட்ட 3டி டுவிட் சலசலப்பை ஏற்படுத்தியது.
Look who's here 👍#TeamIndia #CWC19 pic.twitter.com/V4y27pBYOC
— BCCI (@BCCI) June 15, 2019
தற்போது இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக ரிஷப் பண்ட் மான்செஸ்டர் சென்றுள்ளார். ஆனால் இந்திய அணியில் ரிஷப் பண்ட் தற்போது பங்கேற்க முடியாது. ஒருவேளை தவானால் முழுமையாக குணமடைய முடியாமல், உலகக்கோப்பை தொடரில் இருந்து முழுமையாக விலகும் பட்சத்தில் மட்டுமே ரிஷப் பண்ட்டால் இந்திய அணியில் இடம் பெற முடியும். ஆனால் கிரிக்கெட்டில் வல்லரசாக இருக்கும் பிசிசிஐ-யால் எதுவும் சாத்தியம் ஆகலாம். அதனால் ரசிகர்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.