தென் ஆப்பிரிக்காவை தெறிக்கவிடும் இந்தியா; அசத்தல் பந்துவீச்சு, மளமளவென சரியும் விக்கெட்டுகள்.!



world cup 2019 - ind vs sa - sa 5 wickets 112 runs

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலககோப்பை தொடரில் இன்று இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

கடந்த மே 30 ஆம் தேதி துவங்கிய உலககோப்பை தொடரில் இந்தியாவை தவிர மற்ற அனைத்து அணிகளும் ஏற்கனவே ஆடிவிட்டன. இந்திய அணி இன்று தனது முதல் போட்டியில் ஆடுகிறது.

World cup 2019

இந்த போட்டியில் இந்திய அணியில் சமி, ஜடேஜா, விஜய்சங்கர், தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. நான்காவது பேட்ஸ்மேனாக கேஎல் ராகுல் இறங்குகிறார். காயம் காரணமாக சென்ற ஆட்டத்தில் ஓய்வெடுத்த ஆம்லா இன்று ஆடுகிறார்.

தென்னாப்பிரிக்கா அணியின் டிகாக் மற்றும் ஆம்லா துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பும்ரா மிகவும் அபாரமாக பந்துவீசி முதல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆம்லா, டீகாக் ஆகியோரை முறையே 6 ,10 ரன்களில் வெளியேறினார்.

World cup 2019

அதன்பிறகு நிலைத்து நின்று ஆட முயன்ற டூப்ளஸிஸ்(38 ) மற்றும் டூசன்(22 ) ஆகியோர் சாகலின் சூழலில் சிக்கி தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய 
டுமினியை தனது பங்கிற்கு குல்தீப் யாதவ் 3 ரன்களில் வெளியேறினார். 

தற்போது 28 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 112 ரன்களில் தென்னாப்பிரிக்க அணி ஆடிக் கொண்டிருக்கிறது.