தல தோனியின் நாட்டுப்பற்றை அவமதிக்கிறதா ஐசிசி; ரசிகர்கள் கொந்தளிப்பு.!



world-cup-2019---thala-dhoni---glouse-problem---icc-bcc

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்லும் கனவோடு இங்கிலாந்து புறப்பட்டு சென்றுள்ளது. இதற்கு முன்னர் நடந்த பயிற்சி ஆட்டத்தின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.

m.s dhoni

இரண்டாவது போட்டியில் இந்திய அணி வங்கதேச அணியை வீழ்த்தி அபரா வெற்றி பெற்றது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டித் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து நாளை மறுநாள் ஜூன் 9-ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தனது இரண்டாவது போட்டியில் விளையாட உள்ளது.



 

இந்நிலையில், தோனியின் கிளவுஸில் இந்திய பாரா ஸ்பெஷல் போர்ஸின் முத்திரையான ‘பாலிதான்’ (தியாகம்) இடம் பெற்றிருந்தது. இதை கவனித்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தோனியின் தேசப்பற்றை பாராட்டி வந்தனர். கடந்த 2011ல் இந்திய ராணுவத்தின் கவுரவ லெப்டினெண்ட்டாக தோனி நியமிக்கப்பட்டார். விளையாட்டு வீரராக மட்டும் இல்லாமல் நாட்டின் மீது தோனி கொண்டுள்ள பற்று காரணமாக தான் தோனியை ரசிகர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.



 

இந்நிலையில் இது விதிமீறல் என்பதால், தோனி கிளவுசில் உள்ள ராணுவ முத்திரையை நீக்க உத்தரவிட வேண்டும் என ஐசிசி இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பிசிசிஐ) உத்தரவிட்டுள்ளது. ஆனால் கிரிக்கெட் வல்லரசாக பிசிசிஐ தோனியின் கிளவுசில் உள்ள முத்திரையை நீக்க சொல்லுமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், ஐசிசி தோனியின் நாட்டுப்பற்றை அவமானப்படுத்தியுள்ளதாக கொந்தளித்து வருகின்றனர்.