மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யுவராஜ் சிங்கிற்கு இப்படி ஒரு ஆசையா.! ஏற்குமா பிசிசிஐ?
நடைப்பெற இருக்கும் உள்ளுர் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாட அனுமதி கோரி பிசிசிஐக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி பேட்ஸ்மேனாக விளங்கிய யுவராஜ் சிங். 2007 ஆம் ஆண்டு நடைப்பெற்ற டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஒருநாள் உலகக் கோப்பை உள்பட பல்வேறு போட்டிகளின் வெற்றிக்கு சொந்தக்காராக திகழ்ந்துள்ளார்.
யுவராஜ் சிங் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியின் அனைத்து ஆட்டங்களிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் கிரிக்கெட் போட்டியில் பங்கு பெற விரும்புவதாக பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோருக்கு யுவராஜ் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார்.