மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மன்கட் முறையில் பேட்ஸ்மேனை அவுட் செய்த பவுலர்.! இதுல என்ன தவறு இருக்கு.? வெஸ்ட் இண்டீஸ் பவுலருக்கு பதில் கொடுத்த யுவராஜ்,!
வெஸ்ட் இண்டீஸில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பப்புவா நியூ கினி மற்றும் உகாண்டா அணிகள் விளையாடிய போட்டியில் மன்கட் முறையில் பேட்ஸ்மேனை அவுட் செய்த சம்பவம் பேசுபொருள் ஆனது.
பப்புவா நியூ கினி அணி பேட்டிங் செய்தபோது ஆடாமுனையில் இருந்த பேட்ஸ்மேன் ஜான் கரிகோ, பந்து வீசுவாதற்கு முன்பாகவே கிரீஸை விட்டு வெளியேறினார். அதை கவனித்த பவுலர் பாகுமா மன்கட் முறையில் ஸ்டம்பிட் செய்து நடுவரிடம் அவுட் கேட்டு முறையிட்டார். நடுவரும் அதற்க்கு அவுட் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பான வீடியோ வெளியாகி, பல கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தது. இதுதொடர்பாக தென்னாப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் சம்ஷி கூறுகையில், இதில் தவறு ஏதும் இல்லை என குறிப்பிட்டார். இதற்க்கு கமெண்ட் செய்த இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், இது முற்றிலும் மோசமானது என குறிப்பிட்டுள்ளார்.