மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த யுவராஜ் சிங்! விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும்.!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ்சிங் நேற்று தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடினார். 2011 உலக கோப்பையில் இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய வீரராக செயல்பட்டவர். இதையொட்டி அவருக்கு முன்னாள் கேப்டன் சச்சின் தெண்டுல்கர், முன்னாள் வீரர்கள் ஷேவாக் உள்பட பல வீரர்கள் சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அவரது பிறந்தநாளை விவசாயிகளுக்கு அர்ப்பணித்த யுவராஜ்சிங் தனது டுவிட்டர் பதிவில், ‘விவசாயிகள் நாட்டின் உயிர்நாடி என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்த முறை வழக்கமான பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு மாறாக விவசாயிகளுக்கும், அரசுக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தையில் விரைவாக சுமூக முடிவு எட்டப்பட வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அது தான் எனது விருப்பமும் என பதிவிட்டிருந்தார்.
— Yuvraj Singh (@YUVSTRONG12) December 11, 2020
இந்த விவகாரம் தொடர்பாக எனது தந்தை தெரிவித்த கருத்துக்கு (வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவாக விளையாட்டு வீரர்கள் தங்களது விருதை மத்திய அரசிடம் திரும்ப அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்) வருந்துகிறேன். அது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும். அவரது கருத்துகளோடு எனக்கு துளி அளவு கூட உடன்பாடு இல்லை.
கொரோனா பிரச்சினை இன்னும் முடிந்து விடவில்லை. கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். ஜெய் ஜாவான், ஜெய் கிசான், ஜெய் ஹிந்த்”என்று பதிவிட்டுள்ளார்.