மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கங்குலியை போல் தோனி, விராட் கோலி எனக்கு ஆதரவாக இல்லை! ஆல்ரவுண்டர் யுவராஜ்சிங் ஓப்பன் டாக்!
கங்குலி கேப்டனாக இருக்கையில் அளித்தது போல் டோனி, விராட்கோலி ஆகியோர் தனக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார்.
2007-ம் ஆண்டில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை மற்றும் 2011-ம் ஆண்டில் நடந்த ஒருநாள் உலக கோப்பை போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற டோனி தலைமையிலான இந்திய அணியில் முக்கிய பங்கு வகித்தவர் யுவராஜ் சிங். அவர் 2011-ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலக கோப்பை போட்டியில் தொடர் நாயகன் விருது பெற்று அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்த யுவராஜ் சிங்க் பிரபல பத்திரிகைக்கு பேட்டியளிக்கையில், "நான் சவுரவ் கங்குலி கேப்டனாக இருக்கும்பொழுது நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளேன், அவர் எனக்கு பெரிய அளவில் ஆதரவளித்தார்.
இந்திய அணியில் கங்குலிக்கு பிறகு தோனி இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார், தோனி, கங்குலி கேப்டன்களை பிரித்துப் பார்ப்பது கடினம் என்றாலும் என் நினைவுகள் கங்குலி கேப்டனாக இருந்த நேரத்தை தான் நினைக்க வைக்கின்றது. அதற்கு காரணம் அவர் எனக்கு மிக ஆதரவாக இருந்தார். அது போன்ற ஆதரவு எனக்கு தோனியிடமிருந்தோ, தற்போதைய கேப்டன் விராட் கோலியிடமிருந்தோ கிடைக்கவில்லை என கூறியுள்ளார் யுவராஜ் சிங்.