தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ரோஹித் சர்மாவின் பேட்டிங் பாகிஸ்தான் வீரரை போலவே இருந்தது! யுவராஜ்சிங் என்ன சொல்கிறார்?
ஆரம்ப காலத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மாவின் பேட்டிங் பாக்கிஸ்தான் முன்னாள் வீரர் இன்ஜமாம் உல்-ஹக்கின் ஆட்டத்தை நினைவூட்டுவது போல் இருந்ததாக யுவராஜ்சிங் கூறியிருக்கிறார்.
கொரோனா வைரஸால் உலகமே பெரும் அச்சுறுத்தலில் உள்ளது. இந்தநிலையில் பிரதமர் மோடி முக்கிய விளையாட்டு வீரர்களை தொடர்புகொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அறிவுறுத்தினார். இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் கிரிக்கெட் வீரர்களும் சமூகவலைத்தளங்களில் ரசிகர்களிடையே உரையாடி வருகின்றனர்.
அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ்சிங் சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார். யுவராஜிடம் ரசிகர்கள் பேசுகையில், இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மாவை முதல் முறையாக இந்திய அணியில் பார்த்த போது அவரது ஆட்டம் குறித்து எந்த மாதிரி உணர்ந்தீர்கள்? என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த யுவராஜ்சிங், முதல்முறையாக இந்திய அணியில் அடியெடுத்து வைத்த போது ரோகித் சர்மா களத்தில் நிறைய நேரம் எடுத்துக் கொண்டு அதன் பிறகு அதிரடியாக விளையாடுவது போல் தெரிந்தது. அவரது ஆட்டம் எனக்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்ஜமாம் உல்-ஹக்கின் பேட்டிங்கை நினைவூட்டியது. ஏனெனில் இன்ஜமாம் களத்தில் இறங்கியதும் உடனடியாக வேகமாக ரன் எடுக்கமாட்டார். முதலில் எதிரணியின் பந்து வீச்சை சமாளித்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டு, பிறகு தான் அதிரடியாக விளையாடுவார் என தெரிவித்தார். யுவராஜ் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிடும் வகையில் ரூ.50 லட்சத்தை பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.