அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
"அஸ்வின்": அந்த பேர கேட்டாலே ச்சும்மா அதிருதில்ல..!! தடதடக்கும் எக்ஸ் வலைதளம்..!!
அஸ்வின் குறித்து யுவேந்திர சஹல் வெளியிட்ட பதிவு எக்ஸ் வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2 வது ஒருநாள் போட்டி இந்தூரில் உள்ள மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட்-சுப்மன் கில் ஜோடி தொடக்கம் அளித்தது.
கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் (8) ஏமாற்ற, நிலைத்து நின்ற சுப்மன் கில் (104) சதமடித்து அசத்தினார். பின்னர் வந்த ஸ்ரேயாஸ் அய்யர் (105), கேப்டன் கே.எல் ராகுல் (52), இஷான் கிஷன் (31), சூர்யகுமார் யாதவ் (72), ரவீந்திர ஜடேஜா (13) ரன்களை குவித்து அமர்க்களப்படுத்தியதால் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது.
இதனை தொடர்ந்து மழையால் தடைபட்ட போட்டியில், டி.எல்.எஸ் விதிப்படி 317 ரன்கள் இலக்கை (33 ஓவர்கள்) துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு, ஷார்ட்-டேவிட் வார்னர் ஜோடி இன்னிங்ஸை தொடங்கியது. ஷார்ட் (8) ரன்களுடன் வெளியேறிய நிலையில், அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் கோல்டன் டக்-அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். பின்னர் களமிறங்கி பொறுப்புடன் ஆடிய லபுசேனை 27 ரன்களுக்கு அஸ்வின் வெளியேற்றினார்.
இடது கை பேட்ஸ்மேனான டேவிட் வார்னர், அஸ்வின் பந்துவீசிய போது வலதுகை பேட்ஸ்மேனாக மாறி விளையாடியும் (53) ரன்னில் எல்.பி.டபுள்யூ முறையில் அஸ்வினுக்கு இரையானார். பின்னர் வந்த ஜோஸ் இங்கிலீஸை அஸ்வின் (6) ரன்களுக்கு வெளியேற்ற, அலெக்ஸ் கேரியை (14) ரன்களுக்கு ரவீந்திர ஜடேஜா வெளியேற்றினார்.
பின்னர் வந்த கேமரூன் கிரீன் (19) விக்கெட் கீப்பர் இஷான் கிஷனால் ரன்-அவுட் செய்யப்பட்டார். அடுத்து வந்த சீன் அப்போட் களத்தில் போராடிக் கொண்டிருக்க, ஆடம் ஸாம்பாவை (5) ரன்களில் ஜடேஜா காலி செய்தார். இதன் பின்னர் வந்த ஜோஸ் ஹேசில்வுட்டின் போராட்டம் இந்திய அணியின் வெற்றியை தாமதப்படுத்தியது. இந்த நிலையில் கடுமையாக போராடிய சீன் அப்போட் அரைசதம் விளாசி அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இதற்கிடையே, ஜோஸ் ஹேசில்வுட் (23) ரன்களில் வெளியேற, 54 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணிக்கு நிலைத்து நின்று போராடிய சீன் அப்போட்டை ஜடேஜா வெளியேற்றிய பின்பு ஆஸ்திரேலிய அணியின் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசையை சீர்குலைத்த ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்து, சக சுழற்பந்துவீச்சாளர் யுவேந்திர சஹல் வெளியிட்ட பதிவு எக்ஸ் வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Ravichandran Ashwin name is enough @ashwinravi99 #Legend 🇮🇳 #INDvsAUS
— Yuzvendra Chahal (@yuzi_chahal) September 24, 2023
அந்த பதிவில், ரவிச்சந்திரன் அஸ்வின் அந்த பெயரே போதும் என்று யுவேந்திர சஹல் கூறியுள்ளார்.