தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
வெள்ளிக்கிழமை.. இதையெல்லாம் மறந்தும் செய்து விடாதீர்கள்.. கடன் தொல்லை கழுத்தை நெரிக்கும்.!
பொதுவாகவே வெள்ளிக்கிழமையை நாம் அனைவரும் மங்களகரமான நாளாக பார்க்கிறோம். அப்படிப்பட்ட வெள்ளிக்கிழமைகளில் சில விஷயங்களை செய்தால் அதை வீட்டில் வறுமையை ஏற்படுத்தி கடன் பிரச்சினைகளை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அது என்ன விஷயங்கள் என்பது குறித்து பார்க்கலாம்.
வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை அடிப்பது கூடாது. அந்த நாளில் ஒட்டடை அடித்து குப்பைகளை வீட்டில் இருந்து வெளியேற்றினால் மகாலட்சுமியை விரட்டி அடிப்பது போல ஆகிவிடுமாம்.
எனவே, வெள்ளிக்கிழமையில் வீட்டை சுத்தம் செய்யாமல் முந்தைய தினமான வியாழக்கிழமை ஒட்டடை அடித்து வீட்டை சுத்தம் செய்து விடுவது நல்லது.
வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக இருந்தால் பலரும் அன்றைய நாளில் துணிகளை குவித்து போட்டு துவைப்பார்கள். ஆனால் மறந்தும் வெள்ளிகிழமையில் துணி துவைப்பது மற்றும் வீட்டில் உள்ள மற்ற பொருள்களை துடைத்து வைப்பது கூடாது.
வெள்ளிக்கிழமையில் பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிப்பது செய்யலாம். ஆனால் அன்றைய தினம் ஆண்கள் எக்காரணத்தைக் கொண்டும் என்னை தேய்த்து குளிக்க கூடாது. அது மட்டும் இல்லாமல் முடி வெட்டுவது, முக சவரம் செய்வது, நகம் வெட்டுவது எதையும் செய்யக்கூடாது.
வெள்ளிக்கிழமையில் வீட்டில் இருக்கும் தானியங்கள், அரிசி, உப்பு போன்றவற்றை யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது. முடிந்த அளவிற்கு யாருக்கும் வீட்டிலிருந்து பணமோ பொருளோ கொடுக்காமல் தவிர்ப்பது நல்லது.