காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
சனிக்கிழமையில் இப்படி தூபம் போட்டால் கண் திருஷ்டி நீங்கி, தோஷங்கள் விலகும்.!
சனிக்கிழமை எள்தீபம் சரியா.?
சனிக்கிழமையில் எள்தீபம் ஏற்றுவது சனி பகவானுக்கு உகந்தது என்றும், இதனால் சனி தோஷத்தில் இருந்து விடுபடலாம் என்றும் கூறப்படுகிறது. இது முற்றிலும் உண்மை என்றாலும், பலரும் சனிக்கிழமையில் எள்தீபம் ஏற்றுவதற்கு அன்றுதான் எள்தீபத்தை வாங்குகின்றனர். இது முற்றிலும் தவறு.
எள்தீபம் ஏற்றுபவர்கள் செய்யும் தவறு :
சனிக்கிழமையில் வாங்குவதால் அந்த தோஷம் நமக்கு தொடரத்தான் செய்யும். எனவே, எள்தீபம் ஏற்றுவதாக இருந்தால் வெள்ளிக்கிழமையே எள்தீபத்தையோ அல்லது எள்லையோ வாங்கி கொள்ள வேண்டும்.
சனிக்கிழமை சாம்பிராணி தூபம் :
எள் என்பது சனி பகவானுக்கு உரிய தானியம் கண் திருஷ்டியை நீக்க சனிக்கிழமையில் சாம்பிராணியில் எள்ளை வைத்து தூபம் போடும்போது நமக்கு தோஷம் நீங்குவதுடன் கண் திருஷ்டியும் நீங்குகிறது.
இதையும் படிங்க: தொட்ட காரியங்கள் வெற்றி பெற சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை இப்படி வழிபடுங்கள்.!
இதற்கு தேவையான பொருட்கள் :
ஓமம்
வெள்ளை மிளகு
வெண்கடுகு
பால் சாம்பிராணி பொடி
எள் கால் ஸ்பூன்
தூபம் போடும் முறை :
இந்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொண்டு சாம்பிராணி போட வேண்டும். சனிக்கிழமை மாலை 6 மணி முதல் 6 :45க்குள் இந்த தூபத்தை வீட்டில் போட வேண்டும். வீட்டின் பின் புறத்தில் இருந்து ஆரம்பித்து மற்ற இடங்கள் அனைத்திலும் போட்டுவிட்டு முன் வாசல் வழியாக வெளியேற்ற வேண்டும்.
பூஜை அறை இருந்தால் அங்கு வழிபாடு செய்யும்போது தூபத்தை காட்டலாம். வாசல் படியில் தூபத்தை காட்டி சிறிது நேரம் அங்கேயே அதை வைத்து விட வேண்டும். இதன் மூலம் நமக்கு இருக்கும் தோஷங்கள் விலகுவதுடன் கண் திருஷ்டி இருந்தால் அது கழிந்து விடும்.
இதையும் படிங்க: சனிக்கிழமையில் இந்த பொருட்களை எல்லாம் வாங்கினால் கெட்டது நடக்கும்.. இதையெல்லாம் செய்து விடாதீர்கள்.!