குழந்தை பாக்கியத்தை தரும் பெண் வடிவ விநாயகர்.? இக்கோயில் எங்கு அமைந்துள்ளது தெரியுமா.!?



Kaniyakumari temple history news

இந்த உலகில் ஆண் தெய்வங்கள், பெண் தெய்வங்கள் என பல வகையான தெய்வங்களை நாம் வழிபட்டு வருகிறோம். குறிப்பாக நம்மில் பலரும் விநாயகரை ஆண் தெய்வமாகவே பார்த்து வழிபட்டிருப்போம். ஆனால் பெண் வடிவ விநாயகரை பார்த்து உள்ளீர்களா? இவ்வாறு பெண் வடிவ விநாயகருக்கு தமிழ்நாட்டில் கோயில் உள்ளது குறித்து தெரியுமா? இதைக் குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

விநாயகர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரன் தானுமாலயன் என்ற கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அமைந்துள்ள தூணில் பெண் வடிவம் உருவம் கொண்ட விநாயகரின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த பெண் வடிவம் கொண்ட விநாயகரை விக்னேஸ்வரி,  கணேஸ்வரி, கணேஷினி, விநாயகரி என பல பெயர்களை கொண்டு அழைத்து வருகின்றனர்.

தாணுமாலயன் என்ற பெயர் கொண்ட இக்கோயில் மும்மூர்த்திகளை உள்ளடக்கியதாகும். தானுமாலயன் என்ற பெயரில் தானு என்பது சிவனையும், மால என்பது பெருமாளையும், அயன் என்பது பிரம்மாவையும் குறிக்கும். இக்கோயிலில் 5.5 மீ உயரமுள்ள மிகப்பெரிய இசை தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது.

விநாயகர்

மேலும் குறிப்பாக விநாயகர் பெண்ணுக்குரிய ஆபரணங்கள் மற்றும் புடவைகள் அணிந்து பெண் தெய்வமாக வரும் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மேலும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணம் வரம் வேண்டி காத்திருப்பவர்கள் இந்த கணேஷ்வரிக்கு அபிஷேகம் செய்து மனதார வேண்டி வந்தால் நினைத்த காரியம் விரைவில் நடைபெறும்.