#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மேஷ ராசிக்காரர்களுக்கு தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்.! இதில் கவனம் வேண்டும்.!
சுறுசுறுப்பாக இருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு தமிழ் புத்தாண்டான குரோதி வருடம் எப்படி இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம். குடும்பத்தில் சண்டை சச்சரவு ஒற்றுமை இதுவரை இருந்திருக்கலாம். இந்த வருடம் அதற்கு தீர்வு காணும் வருடமாக இருக்கும். வீட்டில் சுப காரியங்கள் அரங்கேறும். எதிர்பார்த்த உதவிகள் அரசிடம் இருந்து கிடைக்கும். பண வரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். சேமிக்கும் செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருங்கள். மனதில் அப்போது சின்ன சின்ன சங்கடங்கள் ஏற்படும்.
நண்பர்களை சந்திக்கும் போது புதிய வாய்ப்புகள் ஏற்படும். எந்த ஒரு செயலை செய்யும் போதும் மிகவும் சிந்தித்து காரியத்தில் இறங்கவும். அவ்வப்போது செயல்பாடுகளில் சோர்வு ஏற்படலாம். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. மனதிற்கு பிடித்தவரகள் மூலம் சில நல்ல விஷயங்கள் நடந்தேறலாம்.
தொழில் போட்டிகளை துணிச்சலாகவும் சாதுரியமாகவும் உங்களால் சமாளிக்க முடியும். சில அமைச்சர்களுக்கு பின்னர் எதிர்பார்த்த பணிகள் நடக்கும். வேலை ஆட்களை கையாளும்போது பொறுமையுடன் இருக்க வேண்டும். தொழில் ரகசியங்களை அனுபவங்கள் என்று மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை நிறுத்துங்கள். வசூல் தொடர்பான பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.