#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"மாஸ்க் அவசியம்" கொரோனா கட்டுப்பாடுகள் திருப்பதியில் தீவிரம்...!
வருகின்ற புத்தாண்டு முதல் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொண்டு கோவிலுக்கு வருகை தர வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் கூறி இருக்கிறது.
பல நாடுகளில் கொரோனா அதிகரித்து வருவதால், மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி திருமலை வெங்கடாஜலபதியை தரிசனத்தையும் அருளையும் பெறுவதற்காக, ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஆன்லைனில் இலவச டிக்கெட்டுகள் மற்றும் கட்டண டிக்கெட்டுகள் விற்கப்பட்டு வருகின்றன.
சொர்க்கவாசல் 10 நாட்கள் வரை திறந்திருக்கும், இதனால் ஏராளமான பக்தர்கள் ஜனவரி 1ஆம் தேதி முதல் கோவிலுக்கு செல்ல தொடங்குவார்கள். முன்னெச்சரிக்கை தொடர்பாக திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி கூறியதாவது, "திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அனைவரும், ஜனவரி 1ம் தேதி முதல் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவும்" என கூறியிருக்கிறார்.