53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
பங்குனி உத்திர நாளான இன்று நாம் செய்யவேண்டிய அவசியமான விஷயம்!
குலதெய்வத்தை பங்குனி உத்திர நட்சத்திரன்று கண்டிப்பாக வழிபடவேண்டும் என்பது, தென் மாவட்ட மக்களின் வழக்கமாகும். பங்குனி உத்திர நட்சத்திரமான பவுர்ணமி அன்று எதற்கு இந்த வழிபாடு நடத்தப்படுகிறது என்றால் பவுர்ணமிபோல் நமது வாழ்க்கையும் பிரகாசிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
பங்குனி உத்தரம் என்பது சைவக் கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும். தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம். எனவே 12 கை வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது.
கொரோனவால் நாடே முடங்கியுள்ள நிலையில் இந்தியாவில் உள்ள கோவில்களுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது. பங்குனி உத்திர நட்சத்திரன்று கண்டிப்பாக வழிபட்டால் வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம். இந்தநிலையில் கொரோனாவால் நாடே அச்சுறுத்தலில் உள்ளபோது யாரும் கோவிலுக்கு போகவேண்டாம். வீட்டில் இருந்தபடியே வழிபடுவோம்.
அனைவரும், வீட்டிலேயே இருந்து உங்களது குலதெய்வ சாமிகளை வேண்டி, கொரோனா விரைவில் நம் நாட்டை விட்டு முற்றிலும் விலக வேண்டும் என வேண்டிக்கொள்வோம். அணைத்து விழாக்களையும் தாண்டி நாம் அனைவரும் வீட்டிற்குள்ளே முடங்க வேண்டும் என்பதுதான் தற்போதைய உண்மை சூழ்நிலை. அனைவரும் ஒன்றுபட்டு மத்திய அரசின் அறிவுறுத்தலை கேட்டு, அதன்படி நடந்து கொரோனாவை விரைவில் விரட்டுவோம்.