மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீண்ட நாட்களுக்கு பிறகு சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.!
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனவை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த சில மாதங்களாகவே தமிழகம் முழுவதிலும் வழிபாட்டுத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இந்தநிலையில் கட்டுப்பாடுகளுடன் சில இடங்களில் வழிபாட்டுத்தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் பக்தர்கள் கூட்டமாக செல்லக்கூடிய இடங்களுக்கு இன்னும் முழுவதுமாக அனுமதி அளிக்கப்படவில்லை. அந்தவகையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல தற்போதுவரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் விசேஷமாக இருக்கும்.
இன்று 28.10.2020 பிரதோஷம் வருகிறது. அதேபோல ஐப்பசி மாத பவுர்ணமியும் வருவதால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் 31-ந் தேதி வரை 4 நாட்கள் அனுமதி வழங்கப்படுகிறது. அங்கு உடல் வெப்பநிலை அறியும் கருவி மூலம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சதுரகிரி மலையில் தங்குவதற்கும், நீரோடையில் குளிப்பதற்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.