தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
இல்லத்தரசிகளின் கவனத்திற்கு.. பூஜை பாத்திரத்தை சுத்தம் செய்ய நேரமில்லையா?.! இதை ட்ரை பண்ணுங்க பளபளன்னு மின்னும்..!!
பூஜை பாத்திரங்கள் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். பூஜையறையில் இருக்கும் பாத்திரங்கள் அழுக்கப்படிய விடுவது, தூசுக்களோடு இருப்பது என்று இருந்தால் குடும்பத்தில் நிம்மதி இருக்காது. மகிழ்ச்சி, வருமானம் குறையும். கடன்தொல்லை, தரித்திரம் வந்து சேரும்.
இதனால் பூஜையறையில் உள்ள பொருட்களை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்வது நல்லது. பொருட்களை அனுதினமும் தேய்த்து சுத்தம் செய்வது இயலாது என்றாலும், வாரத்திற்கு ஒரு முறையாவது அதை மேற்கொள்ள வேண்டும்.
ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்றால் பூஜைபாத்திரத்தை சுத்தம் செய்ய நேரம் இருக்காது என்ற சூழ்நிலை இருக்கும். அதற்கு என்ன செய்யலாம்? என்று இனி காணலாம். ஒருமுறையாவது கட்டாயம் பூஜைக்குரிய பாத்திரங்களை தேய்த்து சுத்தம் செய்து வைக்கவேண்டும்.
பூஜை பாத்திரத்தில் இருக்கும் எண்ணெய் மற்றும் திரி போன்றவற்றை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். இதனை அப்படியே விடும் பட்சத்தில் நாளடைவில் அது பாசியாக மாறுகிறது. இதனால் சுத்தம் செய்யும் வேலையும் கடினமாகிவிடும்.
பூஜை பாத்திரத்தை முதலில் புளி நீரில் ஊறவைத்து, பின்னர் சாதாரண முறையில் சுத்தம் செய்தாலே போதுமானது. தேவை என்றால் எலுமிச்சம்பழம் மற்றும் பிற பூஜை சுத்தம் செய்யும் பொருட்கள் உபயோகம் செய்து கொள்ளலாம்.