#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
செவ்வாய் இடமாற்றாம் திடீர் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்.!
நவகிரகங்களுக்கு தளபதியாக இருக்கும் செவ்வாய் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றுவார். அந்த வகையில் கடந்த ஜூலை 8-ம் தேதி செவ்வாய் நாயகன் கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிக்க துவங்கியுள்ளார். இதன் காரணமாக 12 ராசிகளுக்கும் நல்ல மற்றும் கெட்ட பலன்கள் ஏற்பட போகிறது. இந்த செவ்வாய் மாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 3 ராசிகள் குறித்து இதில் பார்க்கலாம்.
ரிஷபராசி :
* செவ்வாய் கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் ரிஷப ராசிக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கப் போகிறது. நீண்ட நாட்களாக நடக்காத இருந்த காரியங்கள் வெற்றி கரமாக நடக்கும். வியாபாரம், தொழில் போன்றவற்றில் இப்போது மிகவும் சாதகமான காலகட்டம். அரசு ஊழியர்கள் இடமாற்றம் அடையலாம். போட்டி தேர்வுகள் எழுதுபவர்களுக்கு திடீரென வெற்றி கிடைக்கலாம். உறவுகளுக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். வேலை செய்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்பட போகும் காலகட்டம்.
கன்னிராசி :
* கன்னி ராசிக்கு கௌரவம் அதிகரிக்க கூடிய காலகட்டம் புதிதாக வாகனம் மற்றும் சொத்துக்கள் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். புரிதல் ஏற்படும். பொருளாதார நிலை, செல்வவளம் பெருகும். மாணவர்களுக்கு இது ஒரு பொன்னான காலம்.
கும்பராசி :
* கும்ப ராசியின் வாழ்க்கையில் நேர்மறை சக்தி அதிகரிக்க போகிறது. எனவே, இதுவரை கண்டு கொண்டிருந்த கனவுகள் நிஜமாகும். பணம் குறித்த பிரச்சினைகள் காணாமல் போகும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். திருமண தடைகள் நீங்கும். மேலும், கணவன், மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். பணியிடத்தில் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் பண வரவு அதிகரிக்கும். பணம் பற்றிய விஷயங்களில் இருந்து வந்த தடை நீங்கி பணவரவு அதிகரிக்கும்.