என்னது... காலி மதுப்பாட்டில்களுக்கு ₹10 டிஸ்கவுண்ட்... செம குஷியில் குடிமகன்கள்... எங்கு தெரியுமா.?
நீலகிரி மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடைகள் பல செயல்பட்டு வருகின்றன. அதில் பல குடிமகன்கள் டாஸ்மாக்கை வாங்கி குடித்து விட்டு அதனை காட்டு பகுதியில் வீசி விட்டு செல்கின்றனர்.
இதனால் காட்டு பகுதியில் உள்ள வன உயிரினங்களுக்கு பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் விதமாக புதிய அறிவிப்பு ஒன்றை நீலகிரி மாவட்ட டாஸ்மாக் கடைகள் விடுத்துள்ளனர்.
அதாவது குடித்து விட்டு வீசும் மதுபாட்டில்களை மீண்டும் டாஸ்மாக் கடைகளிலேயே கொடுத்தால் பாட்டிலுக்கு ₹10 டிஸ்கவுண்ட் செய்யப்படும் அல்லது புதிய பாட்டிலின் விலையில் ₹10 சலுகை செய்யப்படும் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பால் காட்டின் சுற்றுசூழல் பாதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.