மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
10 ஆம் வகுப்பு மாணவிக்கு திருமணம் செய்ய முயற்சி.! பள்ளிக்கு சென்ற மாணவி செய்த அதிர்ச்சி காரியம்!!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே செம்பேடு என்ற கிராமத்தில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவரது மனைவி பரிமளா. இவர்கள் விவசாய கூலித்தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.இவர்களில் மூத்த மகளுக்கு திருமணமாகிவிட்டது.
மற்றொரு மகள் குருவராஜபேட்டையில் இயங்கி வரும் அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முயற்சி செய்துள்ளனர். அதாவது ஆறுமுகத்திற்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்து சிகிச்சை பெற்று வருவதால் மகளுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அந்த மாணவி பள்ளியில் மயங்கி விழுந்துள்ளார். பின் அவர் விஷத்தன்மை கொண்ட செடியின் சாறை குடித்தது தெரிய வந்துள்ளது. உடனே பதறிப்போன ஆசிரியர்கள் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் அவர்கள் பள்ளிக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் சிகிச்சைக்கு பிறகு சிறுமி தற்போது நலமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.