மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விருதுநகரில் பரபரப்பு!! மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10 வயது மாணவன் உயிரிழப்பு... கதறும் பெற்றோர்!!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த மேட்டமலை பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வரும் இவருக்கு நிதீஷ்குமார் (10) என்ற மகன் உள்ளான். நிதிஷ் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 5 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான்.
இந்நிலையில் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று வந்த நிதிஷ்க்கு சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் வந்துள்ளது. உடனே கருப்பசாமியை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் காண்பித்து வந்துள்ளார். ஆனால் நிதிஷ்க்கு காய்ச்சல் குறையாததால் விருதுநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு சிறுவனை பரிசோதித்து விட்டு மருத்துவர்கள் நிதிஷ் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். பின்னர் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி நிதிஷ் பரிதாபமாக உயிரிழந்தான்.