திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அண்ணா.. மூச்சு முட்டுது! சீக்கிரம் வாங்க! கெஞ்சிய மாணவருக்கு அலட்சியத்தால் நேர்ந்த துயரம்! வெளியான அதிர்ச்சி ஆடியோ!
காஞ்சிபுரம் கீரை மண்டபம் பகுதியில் வசித்து வருபவர் நடராஜன். இவரது மகன் கணேஷ்குமார் கல்லூரி மாணவரான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பச்சையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட சென்றுள்ளார அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் அவர் அங்கேயே உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கதறி அழுதுள்ளனர். பின்னர் கணேஷ் குமாரின் இறுதிச் சடங்குகள் முடிந்த நிலையில் அவரது பெற்றோர்கள் கணேஷ் குமாரின் செல்போன் பதிவுகள், கடைசியாக யாரிடம் பேசியுள்ளார் என்று பார்த்துள்ளனர்.
அப்பொழுது கணேஷ்குமார் இறுதியாக 108க்கு போன் செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து செல்போனில் உள்ள கால் ரெக்கார்டிங் கேட்டபோது உயிருக்கு போராடிய கணேஷ்குமார் 108க்கு போன் செய்து தன்னை காப்பாற்றும்படி கெஞ்சியுள்ளார். இந்த ஆடியோவை கேட்டு கணேஷ் குமாரின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் அந்த ஆடியோவில் மாணவர் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து, நான் பச்சையப்பா ஸ்கூல் கிட்ட இருக்கிறேன், மூச்சு முட்டுது கொஞ்சம் சீக்கிரம் வாங்கண்ணா என்று கூறியுள்ளார் அதற்கு 108 ஆம்புலன்ஸ் ஊழியர், பக்கத்துல யாராவது இருக்காங்களா! குடுங்க என சொல்லியிருக்கிறார். அதற்கு மாணவர் பக்கத்தில் யாருமே இல்லை அண்ணாகொஞ்சம் சீக்கிரம் வாங்க. முடியவில்லை என்று கூறியுள்ளார்.
அதற்கு ஆம்புலன்ஸ் ஊழியர் சீக்கிரமா எங்கிருந்து வருவது நீங்க எங்க இருக்கீங்கனு தெளிவா சொல்லுங்க.பயப்படாதீங்க பக்கத்துல இருக்கிறவங்க கிட்ட குடுங்க யாருமே இல்லையா என்று கேட்டுள்ளார். பின்னர் யாருமில்லை காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் ஸ்கூல் மூங்கில் மண்டபம்ணா சீக்கிரம் வாங்க என்று கெஞ்சிய நிலையில் ஆம்புலன்ஸ் ஊழியர் நீங்கதான் பக்கத்தில் யாராவது இருக்காங்களான்னு பார்க்கணும். டக்குனு நடந்துபோய் யாரையாவது கால் பண்ண சொல்லுங்க என்று அலட்சியமாக கூறியுள்ளார். சுமார் 16 நிமிடம் மாணவருக்கும் ஆம்புலன்ஸ் டிரைவருக்குமிடையே உரையாடல் தொடர்ந்துள்ளது.
இந்நிலையில் கணேஷ் குமாரின் பெற்றோர்கள் தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ந்த பின்னும் 108 நிர்வாகத்தினர் அலட்சியமாக நடந்து கொண்டதால் நாங்கள் எங்களது மகனை இழந்து விட்டோம். இனி இதுபோன்ற நிலைமை யாருக்கும் வரக்கூடாது என கண்ணீருடன் கூறியுள்ளனர்.