காதலிப்பதாக 10ம் வகுப்பு சிறுமியை ஏமாற்றிய செங்கல்சூளை தொழிலாளி அதிரடி கைது.!



10th STD girl raped by man

சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றிய இளைஞர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம், அகஸ்தியப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அருள் கண்ணன். இவரின் மகன் அந்தோணி ராஜ், செங்கல் சூளையில் பணியாற்றி வருகிறார்.

நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக ஏமாற்றிய அந்தோணி ராஜ், சிறுமியிடம் திருமண ஆசை காண்பித்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.

Crime news

இந்நிலையில், நேற்று சிறுமி தற்கொலைக்கு முயற்சித்து மயங்கி உயிருக்கு போராடவே, அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக பெற்றோர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், அந்தோணி ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.