மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிர்ச்சி சம்பவம்.. 10ம் வகுப்பு பள்ளி மாணவன் வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை.!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புனவாசல் கிராமத்து சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் தீபக் கடலாடியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் மாணவன் இன்று காலை பள்ளி வகுப்பறையில் தூக்கிட்டு நிலையில் தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் உடனடியாக கடலாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் மாணவனின் உடலை மீட்டு கடலாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனிடையே சக பள்ளி மாணவர்களும் விசாரணை செய்ததில் மாணவனுக்கும் பெற்றோருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகவும் அதன் காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாணவன் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறியுள்ளனர். இதனையடுத்து மாணவனின் பெற்றோரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் பள்ளியில் வேறு ஏதேனும் மாணவனுக்கு பிரச்சனை இருந்ததா என்பது குறித்தும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். பள்ளி மாணவன் வகுப்பறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.