மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கடவுளே.. தேர்வின் தோல்வி பயத்தால் 3 மாணவர்கள் தற்கொலை முயற்சி.. கண்ணீருடன் கதறும் பெற்றோர்..!!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்த்து கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பொதுத்தேர்வு முடிவுகள் மே 19-ஆம் தேதியான இன்று வெளியானது. இந்த தேர்வுகளை பல லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய நிலையில், தேர்வு பயத்தால் மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்று தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் காரைக்காலை சேர்ந்த மாணவர் ஒருவர் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்டார். அதேபோல கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரும் தோல்வி பயத்தால் தற்கொலை செய்துகொண்டார். ஆனால் தோல்வி பயத்தில் தற்கொலைக்கு முயன்ற மாணவி, மாணவர் இருவரும் தேர்ச்சியடைந்தனர்.
இதனால் சமூக ஆர்வலர்கள் தேர்வு வாழ்க்கையின் முடிவு கிடையாது. அது வாழ்க்கையின் ஒரு பகுதி. தேர்வில் தோல்வியடைந்தால் வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டும் என்று மாணவர்கள் எண்ணாமல் மீண்டும் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும் என கூறிவருகின்றனர்.