திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அம்மா..!! பிரென்ட் வீடுவரை போய்ட்டுவாரேன்..!! அம்மாவிடம் கூறிவிட்டுச்சென்ற சிறுவன் சடலமாக மீட்பு..! கதறும் பெற்றோர்..
11 வயது சிறுவன் காணாமல் போனநிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்துள்ள இனாம் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது 11 வயது மகன் அன்புகுமார். அன்புகுமார் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 6 ஆம் வகுப்பு படித்துவந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் நண்பன் வீட்டிற்கு சென்றுவருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்ற அன்புகுமார் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
மகன் வீட்டிற்கு வராததை அடுத்து பெற்றோர் சிறுவனை பல இடங்களில் தேட தொடங்கினர். ஆனால் எந்த தகவலும் இல்லை. இந்நிலையில் அங்குள்ள கல்லாற்றில் தேங்கியுள்ள தண்ணீரில் அன்புகுமார் சடலம் மிதப்பதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது.
உடனே அலறி அடித்துக்கொண்டு அங்கு சென்ற பார்த்த அன்புகுமாரின் பெற்றோர், சடலமாக மிதந்த மகனின் வாய் மற்றும் கைகளில் காயம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் தங்கள் மகனை யாரோ அடித்து கொலை செய்து ஆற்றில் வீசியிருக்க வேண்டும் என வி.களத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
புகாரை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சிறுவனின் மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.