கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு... ஒன்றரை வயது குழந்தை 5 அடி ஆழ தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து பலி...



11/2 years old baby fall down in water tank and died in Krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம் சோலையூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பு - மாதம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை சிவஸ்ரீ என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது. சிவஸ்ரீயின் தாய்,தந்தை இருவருமே வேலைக்கு செல்வதால் மாதம்மாளின் அக்கா குழந்தையை கவனித்து வந்துள்ளார்.

சம்பவத்தினத்தன்று வழக்கம் போல் குழந்தையை அக்கா சித்ராவிடம் விட்டு விட்டு மாதம்மாள் வேலைக்கு சென்றுள்ளார். அதனையடுத்து குழந்தை பக்கத்து வீட்டில் இருக்கும் தரையளவு மட்டத்தில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு அருகே விளையாடியவாறு அதனுள் விழுந்துள்ளது.

Krishnagiri

இந்நிலையில் சித்ரா குழந்தையை காணததால் அங்கு இங்கு தேடி பார்த்துள்ளார். அப்போது தான் குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் கிடப்பது தெரியவந்துள்ளது. உடனே சிவஸ்ரீயை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.