உயிராய் இருந்த நண்பர்களின் பிரிவு.. மன உளைச்சலில் 11ஆம் வகுப்பு மாணவர் எடுத்த விபரீத முடிவு.!



11'th student commit suicide for his frinds death

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அக்ஷய் குமார். இவர் அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதால் தனது தாய் வீட்டில் தங்கி பள்ளிக்குச் சென்று வந்துள்ளார் அக்ஷய் குமார். குடும்ப வறுமை காரணமாகப் அக்ஷய் குமார் பள்ளி முடித்ததும் பகுதி நேரமாக கறிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

கறிக்கடையில் வேலை பார்த்தபோது இவருக்கு வட மாநிலத்தை சேர்ந்த ஒருவரின் நட்பு கிடைத்துள்ளது. இருவரும் நல்ல நண்பர்களாகப் பழகிவந்துள்ளனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வடமாநில இளைஞர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது நண்பன் மறைவால் அக்ஷய் குமார் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்தநிநிலையில் அக்ஷய் குமாரின் பள்ளி நண்பரும், சமீபத்தில் பள்ளியின் மாடிக் கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்து இரண்டு நண்பர்கள் தற்கொலை செய்துகொண்டதால் மனவேதனையில் இருந்த அக்ஷய் குமார் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நண்பர்கள் இறந்த சோகத்தில் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.