மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பட்டப்பகலில் மூதாட்டியிடம் 12 பவுன் தங்க நகையை ஆட்டைய போட்ட இளைஞர்... போலீசாரின் அதிரடி!!
காஞ்சிபுரம் அருகே பட்டப் பகலில் ரோட்டில் நடந்த சென்ற மூதாட்டியின் கழுத்தில் இருந்த 12 பவுன் தங்க நகையை ஆட்டைய போட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசுந்தரி என்ற மூதாட்டி. இவர் காந்தி நகர் பகுதியில் ரோட்டில் நடந்து சென்றுள்ளார். அப்போது மூதாட்டியை இருசக்கர வாகனத்தில் தொடர்ந்து வந்துள்ளார் மர்ம நபர் ஒருவர்.
அப்போது யாரும் எதிர்பாராத நேரம் பார்த்து பின்னால் வந்த மர்ம நபர் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் தங்க நகையை ஆட்டைய போட்டு மாயமாகியுள்ளார். இச்சம்பவம் குறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே அங்கிருந்து சிசிடிவி காட்சியை வைத்து குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.