திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கர்ப்பமான 12 வயது சிறுமி ... தந்தை மீது பாய்ந்த போக்சோ சட்டம்... கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த அவலம்.!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12 வயது சிறுமியை கர்ப்பமான விவகாரம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சிறுமியின் வளர்ப்பு தந்தை கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை இறந்துவிட்ட நிலையில் சிறுமியின் தாயார் கம்பி கட்டும் தொழிலாளி ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதனால் சிறுமியும் அவரது தாயாரும் அந்த நபருடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் சிறுமி அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்படுவதாக தனது தாயாரிடம் கூறி வந்தார். இதனைத் தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்து பார்த்தபோது மூன்று மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் சிறுமியிடம் விசாரித்த போது அவரது வளர்ப்பு தந்தை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து சிறுமியின் தாய் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவரது வளர்ப்பு தந்தைக்கு எதிராக வழக்கு பதிவு செய்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர் சிறுமியின் வளர்ப்பு தந்தையின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.