53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
+2 மாணவி மர்ம மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்.. 2 ஆசிரியர்கள் கைது., நடந்தது என்ன?.. பதறவைக்கும் தகவல்.!!
12ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே கணியாமூர் புறவழிச்சாலையில் சக்தி தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வந்த, கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரியநேசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் இன்று அதிகாலை 5 மணியளவில் பள்ளி வளாகத்தில் கீழே விழுந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதனைக் கண்ட விடுதி காப்பாளர் மாணவியை உடனடியாக மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், மாணவி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின் சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற டிஎஸ்பி ராஜலட்சுமி, ஸ்ரீமதியுடன் படிக்கும் சக மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டு, பள்ளியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார்.
பின் இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமாருக்கு தெரியவரவே, அவர் நேரில் சென்று விசாரschணை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறிய பெற்றோர், கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
உறவினர்களின் போராட்டத்தை தொடர்ந்து வேதியியல் ஆசிரியை மற்றும் கணித ஆசிரியர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விசாரித்த பின்னே மாணவியின் மரணத்திற்கு என்ன காரணம்? என்பது தெரியும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.