ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
நாளை வெளியாகிறது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்; அரசு கலைக்கல்லூரிகளில் படிக்க விரும்புவோருக்கான அறிவிப்பு.!
தமிழ்நாடு முழுவதும் 7 இலட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் எழுதிய 12 ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (மே 06) அன்று வெளியாகிறது. சி.பி.எஸ்.இ பருவத்தேர்வுகளுக்கான முடிவுகள் மே 20 ல் வெளியாகிறது.
12 ம் வகுப்பை நிறைவு செய்யும் மாணவர்கள் அனைவரும் அடுத்தபடியாக கல்லூரிகளில் சேர தயாராக இருக்கின்றனர். இதனால் தமிழ்நாடு அரசு மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024 - 2025 ம் கல்வியாண்டில் சேர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உயர்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு செய்து கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.