மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆசிரியர் கண்டித்ததால் 13 வயது மாணவன் எடுத்த விபரீத முடிவு... போலீசார் விசாரணை!!
விழுப்புரம் மாவட்டம் அரக்கோணம் பகுதியில் உள்ள நகர் கிராமத்தை சேர்ந்தவர் பவித்ரம்(13). இவர் அரக்கோணத்தில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் சம்பவ தினத்தன்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டு
வீடு திரும்பியுள்ளான் பவித்ரன். வீட்டிற்கு வந்த சில மணி நேரத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். இதனால் மனவேதனை, சந்தேகமடைந்த பவித்ரனின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அதன்படி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பவித்ரன் பள்ளியில் பயிலும் சக மாணவியை கேலியாக பேசியதால் ஆசிரியர் கண்டித்து பவித்ரனை முட்டி போட வைத்துள்ளார்.
இதனால் மன வேதனை அடைந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அந்த ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.