திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நண்பர்களுடன் பூங்காவில் விளையாடிய 13 வயது சிறுவனுக்கு நிகழ்ந்த சோகம்... கதறும் பெற்றோர்!!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீரான் பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருக்கு 13 வயதில் மனோஜ் குமார் என்ற மகன் உள்ளான். மனோஜ் குமார் அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான்.
இந்நிலையில் நேற்று முன்தினம் புத்தாண்டு தினம் என்பதால் தனது நண்பர்களுடன் மனோஜ் அம்பாள் நகரில் உள்ள முத்து பூங்காவிற்கு விளையாட சென்றுள்ளார். அங்கு சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்த போது அங்கிருந்த மின்கம்பத்தை மனோஜ் குமார் பிடித்ததில் எதிர்பாராத விதமாக மின்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அப்பகுதி போலீசார் மனோஜ் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகமான சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் வந்து செல்லும் இந்த பூங்காவை முறையாக பராமரிக்காமல் அலட்சியமாக செயல்பட்டு வந்த பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் என அனைவர் மீதும் ஒட்டுமொத்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.