மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உன் அம்மாவுக்கு பிடித்த பேய் ஓட வேண்டும்னா நான் சொல்றத செய்... 13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த மாந்திரீகர்!!
நாகர்கோவில் பள்ளிவிளை பகுதியை சேர்ந்த 55 வயதான தொழிலாளி ஒருவரின் மனைவிக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததை அடுத்து நாகர்கோவில் வடசேரி மேல கலுங்கடி பகுதியில் மாந்தீரிகராக இருந்து வரும் மணிகண்டன் (35) என்பவரிடம் அழைத்து சென்றுள்ளனர். அங்கு அந்த பெண்ணிடம் பேசிய பின்னர் அந்த தொழிலாளியிடம் உங்கள் மனைவிக்கு பேய் பிடித்து இருக்கிறது என்று பரிகாரம் செய்ய வேண்டும் என மணிகண்டன் கூறியுள்ளார்.
அதற்காக அந்த தொழிலாளியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இந்நிலையில் அந்த தொழிலாளிக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் 13 வயதான மூத்த மகளின் நடத்தையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த சிறுமி அடிக்கடி வயிற்று வலிப்பதாக கூறி வந்துள்ளார். இதனையடுத்து சிறுமியை மருத்துவமனை அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளனர்.
சிறுமியை பரிசோதித்த மருத்துவர் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர்கள் சிறுமியிடம் இது குறித்து கேட்டுள்ளனர். அப்போது மாந்தீரிகம் செய்வதாக வந்த மணிகண்டன் சிறுமியிடம் உன் அம்மாவுக்கு பிடித்த பேய் போக வேண்டும் என்றால் என் ஆசைக்கு இணங்க வேண்டும் என கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார்.
உடனே இது குறித்து போலீசில் சிறுமியின் உறவினர்கள் புகார் அளித்ததை அடுத்து போலீசார் மணிகண்டனை போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.