மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கட்டுக்குள் வராத கொரோனா! மீண்டும் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு!
தமிழகத்தில் வருகிற 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதைய நிலையே தொடரும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் நாடு முழுவதும் மூன்றாவது கட்டமாக மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது.
மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. ஆனாலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து நீடிப்பதால் தமிழகத்தில் வருகிற 31-ந் தேதி வரை மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அப்போது 25 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாகவும் அவர் கூறி உள்ளார்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 639 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக் கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 224 ஆக உயர்ந்துள்ளது.