அடேங்கப்பா..! எம்புட்டு பெருசு..! விவசாய நிலத்தில் பிடிப்பட்ட 15 அடி நீள ராஜநாகம் - நடுங்கவைக்கும் புகைப்படங்கள்..!



15 feet king cobra rescued near covai

கோவை அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்த 15 அடி ராஜநாகத்தை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு காட்டுக்குள் விட்டனர்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை அடுத்த நரசீபுரம் மலையடிவாரபகுதியல் உள்ள விவசாய நிலத்தில் ராஜநாகம் ஒன்று புகுந்துள்ளதாக அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து பாம்பு பிடிக்கும் வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு 15 அடி நீளமுள்ள பெண் ராஜநாகத்தை பத்திரமாக மீட்டனர்.

snake

பின்னர் நாகத்தின் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டு சிறுவாணி அடர்வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. குறிப்பிட்ட நோக்கமானது இதற்கு முன் இரண்டுமுறை அதே பகுதியில் பிடிபட்டதாகவும், வைதேகி நீர் வீழ்ச்சி அருகே உள்ள வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டதாகவும், தற்போது மீண்டும் அதே பகுதிக்குள் வந்திருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் ராஜநாகம் தொடர்ந்து அந்த பகுதிக்குள் வருவதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

snake