மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விடுதியில் இரவு உணவு அருந்தி சென்ற நர்சிங் மாணவிகள் 15 பேருக்கு வாந்தி மயக்கம்...
சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் உள்ள நர்சிங் கல்லூரியில் மாணவிகள் சில பேர் விடுதியில் தாங்கி படித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல் கல்லூரியில் படித்து முடித்து விட்டு விடுதிக்கு மாணவிகள் வந்துள்ளனர். அப்போது இரவு உணவாக பூரி கிழங்கினை சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சில மணி நேரத்திலேயே ஒவ்வொரு மாணவியாக வாந்தி எடுத்துள்ளனர். ஒரு சில மாணவிகள் மயங்கி கீழே விழுந்துள்ளனர்.
அதனை அடுத்து அந்த மாணவிகளை ராஜா முத்தையா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பூரிக் கிழங்கு உணவில் ஏற்பட்ட ஒவ்வாமையால் வாந்தி மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என கூறியுள்ளனர்.