மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழகத்தில் கொடூரம்... பெத்த தாயையே கத்தியால் குத்திய 15 வயது மகன்... காவல்துறை விசாரணை.!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெற்ற தாயையே மகன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சிறுவனை கைது செய்துள்ள காவல் துறையினர் அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண் தனது கணவரை பிரிந்து சென்னையில் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் திருவண்ணாமலையில் உள்ள தனது பெற்றோரை சந்தித்து விட்டு சென்னைக்கு திரும்ப தயாரானார்.
தாயை பஸ் ஏற்றி விடுவதற்காக அவரது 15 வயது மகன் தாயை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றிருக்கிறார். செல்லும் வழியில் தாய் மகனிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தான் வைத்து இருந்த கத்தியால் தனது தாயையே சராமாறியாக குத்தி இருக்கிறார்.
இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்த அந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த 15 வயது சிறுவனை கைது செய்த காவல்துறையினர் அவனிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட சிறுவன் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டிருக்கிறான்.