மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பகீர் சம்பவம்... 15 வயது சிறுமி தற்கொலை... காதலன் மற்றும் தந்தை உட்பட மூவர் கைது.!
திருக்குவளை அருகே பத்தாம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் காதலன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருக்குவளை அருகே உள்ள கொத்தங்குடி அய்யூா் பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி ஆலத்தம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவியும் அப்பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் சின்னதுரை என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு மாணவியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவியின் வீட்டிற்கு சென்ற சின்னதுரை மாணவி எங்கே என கேட்டிருக்கிறார். அப்போது மாணவியின் சகோதரிக்கும் இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த சின்னதுரை தனது உறவினருடன் சேர்ந்து மாணவியின் சகோதரியை தாக்கியுள்ளார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதற்கிடையே கடந்த 26 ஆம் தேதி மாலை மாணவியை வீட்டில் எங்கு தேடியும் காணவில்லை. இதனைத் தொடர்ந்து வீட்டின் தோட்டத்தில் மாணவி மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய பெற்றோர் அவரது சாவிற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மாணவியின் பெற்றோருடன் சமரசம் பேசி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமியின் அக்கா தாக்கப்பட்ட வழக்கில் சின்னதுரை அவரது தந்தை, தாய் மற்றும் அண்ணன் ஆகியோரின் மீது வழக்கு பதிவு செய்து மூன்று பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.