ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
15 வயது சிறுமி 5 மாத கர்ப்பம்.. 52 வயது முதியவர் போக்சோவில் கைது.!
கன்னியாகுமரியில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 52 முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமநல்லூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமிக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதனையடுத்து சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஐந்து மாத கர்ப்பமாக இருப்பதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
இதனை கேட்டு ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த 52 வயதான ஜீவா குமார் தன்னிடம் நெருங்கி பழகி பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். மேலும் இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் நாகர்கோயில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் ஜீவா குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.