மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
153 பணிகளுக்கான காலியிடப் பணிகள் விண்ணப்பித்துவிடீர்களா? இன்னும் 4 நாட்களே உள்ளது!!
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் 153 பணிகளுக்கான காலியிடப் பணிகள் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் வரும் 11.02.2019க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள்:153
பணியின் பதவி:
• முதன்மை அங்கன்வாடி மையப் பணியாளர்
• குறு அங்கன்வாடி மையப் பணியாளர்
• அங்கன்வாடி உதவியாளர்.
கல்வித்தகுதி:
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
வயதுவரம்பு:
25 முதல் 35 வயதுக்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். விதவை மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 40 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 38 வயது வரையும் சலுகை அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.02.2019
விண்ணப்பிக்கும் முறை:
சம்பந்தப்பட்ட வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களில் மற்றும், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்தும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம், மாவட்ட திட்ட அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.