மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நொடியில் நிகழ்ந்த சோகம்... தண்டவாளத்தில் சிறுநீர் கழித்த மாணவன் ரயில் மோதி உயிரிழப்பு...
தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகே உள்ள கஞ்சான் மேட்டுதெருவை சேர்ந்தவர் ஆசைத்தம்பி. கூலி வேலை செய்து வரும் இவருக்கு ராகுல்(16) என்ற மகன் உள்ளார். ராகுல் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார் .
நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற ராகுல் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்துள்ளார் .சாப்பிட்டு முடித்து விட்டு மீண்டும் பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள தண்டவாளத்தில் சிறுநீர் கழித்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக கோவையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த ஜனசதாப்தி ரயில் மாணவன் மீது மோதியுள்ளது. அதில் மாணவன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ரயில்வே போலீசார் ராகுலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.