மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
16 வயது சிறுவன் டிராக்டர் ஏறி உடல்நசுங்கி பலி!
குளித்தலை அருகே ஒர்க் ஷாப்பில் வேலை செய்து கொண்டிருந்தபோது 16 வயது சிறுவன் மீது டிராக்டர் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பஞ்சப்பட்டி அடுத்த கொடிக்கம்புதூர் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ் மகன் சக்திவேல். இவர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு குளித்தலை அருகே உள்ள மணத்தட்டையில் உள்ள தங்கலட்சுமி ஆட்டோ வொர்க் ஷாப்பில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் பட்டறைக்கு வந்த டிராக்டரை பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக டிராக்டர் முன்னோக்கி நகர் சிறுவன் சக்திவேல் டிராக்டர் டயரில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் சிறுவன் சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே சக்திவேல் தந்தை காளிதாஸ் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆட்டோ ஒர்க் ஷாப் உரிமையாளர் செந்தில்குமார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.