மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடிகார தகப்பன்களே திருந்துங்கள்..! தந்தையின் குடிப்பழக்கத்தை நிறுத்த உயிரைவிட்ட 16 வயது சிறுமி..!
தனது தந்தை மதுபோதைக்கு அடிமையானதால் குடும்பம் நிம்மதியை இழந்தது. அவரின் விடிவே குடும்பத்தின் விடியல் என கடிதம் எழுதிவைத்த சிறுமி தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், சின்னராஜகுப்பம் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணுபிரியா (வயது 16). சிறுமி அங்குள்ள பள்ளியில் பயின்று வருகிறார். சிறுமியின் தந்தை மதுபோதைக்கு அடிமையானவர் ஆவார்.
இதனால் தினமும் வேளைக்கு சென்றுவிட்டு மதுபோதையில் வீட்டிற்கு திரும்பும் விஷ்ணுபிரியாவின் தந்தை, தனது மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் சிறுமி மிகுந்த மனஉளைச்சலோடு இருந்து வந்துள்ளார்.
அவர் தனது தந்தையிடம் பலமுறை குடிப்பழக்கத்தை கைவிடக்கூறியும் பலன் இல்லை. இந்த நிலையில், சிறுமி விஷ்ணு பிரியா கடிதம் எழுதிவிட்டு விபரீத முடிவெடுத்தார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், "எனது தந்தையின் குடிப்பழக்கத்தை அவர் நிறுத்த வேண்டும். அவரின் குடிப்பழக்கத்தால் குடும்பத்தில் நிம்மதி இல்லை. எனது குடும்பம் எப்போது மகிழ்ச்சியாக இருக்கிறதோ, அப்போதுதான் என் ஆன்மாவும் சாந்தி அடையும்" என கடிதம் எழுதி வைத்துள்ளார்.
மதுவுக்கு அடிமையான தந்தைகள் இனியாவது உங்களின் குழந்தைகளுக்காக திருந்துங்கள்; இல்லையேல் நாளை உங்களின் அன்புக்குரிய மகளோ / மகனோ இதேபோல் உயிரைத்துறக்க நேரிடும்.